பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 சாரதியும் பாரதிதாசனும் என்று தணியுமிந்த சுதந்திர தாகம்? என்று மடியுமெங்கள் அடிமையின் மோகம்? என்றெம தன்னைகை விலங்குகள் போகும்? என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும் -பாரதியார் : சுதந்திர தாகம், 1 என்று ஆர்த்தெழுகின்றார். தம் நெஞ்சிற் பயிரிட்டு வளர்த்த சுதந்திரப் பயிர் தீய்ந்து போய்விடக் கூடாது என்று எண்ணுகின்றனர் மக்கள். எனவே இறைவனை இறைஞ்சி உளம் நெக்குருகப் பாடுகின்றார். தண்ணீர்விட்டோ வளர்த்தோம் சர்வேசா இப்பயிரை கண்ணிராற் காத்தோம்; கருகத் திருவுளமோ எண்ணமெலாம் நெய்யாக எம்முயிரி னுள்வளர்ந்த வண்ண விளக்கி:து மடியத் திருவுளமோ? ஓராயிர வருட மோய்ந்து கிடந்தபின்னர் வாராதுபோல வந்த மாமணியைத் தோற்போமோ? -பாரதியார் : சுதந்திரப் பயிர், 1-3 இவ்வாறு சுதந்திர வேட்கை கொண்ட மக்களை அன்னிய ராட்சி சிறையில் தள்ளும்; சித்ரவதை செய்யும். ஆனாலும் தேசபக்தர்களின் நெஞ்சம் நிலைகுலைந்து விடாது என்பதனையும் எக்காலத்திலும் அவர்கள் சுதந்திர தேவியைத் தொழுதிட மறக்கமாட்டார்கள் என்பதனை யும் பாரதியார் பாடுகின்றார். இருந்தரு மனையி னிங்கி இடர்மிகு சிறைப்பட்டாலும் பதந்திரு விரண்டு மாறிப் பழிமிகுத் தழிவுற் றாலும்