பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6,tory, 121 விதந்தரு கோடி யின்னால் விளைந்தெனை யழித்திட்டாலும் சுதந்திர தேவி நின்னைத் - தொழுதிடல் மறக்கி லேனே. -பாரதியார் : சுதந்திர தேவியின் துதி,1 இத்தகைய நெஞ்சுரம் பாரதியாருக்கு வாய்த்திருந்த காரணத்தினால்தான் இந்திய நாடு சுதந்திரம் அடையாத அக்காலத்திலேயே சுதந்திரம் அடைந்துவிட்டதாக உற்சாகக் குரலெழுப்பிப் பாடினார். ஆடுவ்ோமே-பள்ளுப் பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட் டோமென்று i (ஆடுவோமே) எங்கும் சுதந்திர மென்பதே பேச்சு-கம் எல்லோருஞ் சமமென்ப துறுதியாச்சு சங்கு கொண்டேவெற்றி யூதுவோமே-இதைத் தரணிக்கெல் லாமெடுத் தோதுவோமே... நாமிருக்கும் காடுகம தென்பதறிந்தோம்-இது கமக்கே யுரிமையா மென்பதறிந்தோம்-இந்தப் பூமியி லெவர்க்குமினி அடிமை செய்யோம்-பரி பூரணனுக் கேயடிமை செய்துவாழ்வோம். -பாரதியார் ; சுதந்திரப்ாள்ளு, 2,5 அரசியல் விடுதலை மட்டும் பெற்றால் போதுமா? பொருளாதார விடுதலை பெற்றால்தான் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழமுடியும். எனவிே பாரதியார்,