பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/123

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f), torr, 123 காணும் சமுதாயத்தில் அவர் ஒரு முதிர்ந்த மக்கள் கவிஞர் என்பதை நிலைநாட்டிவிட வல்லதாகும். முப்பதுகோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும்பொது ஒப்பிலாத சமுதாயம் - (உடைமை உலகத்துக்கொரு புதுமை -பாரதியார் ; பாரத சமுதாயம் இந்தப் பாரத சமுதாயத்தில் மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமில்லை; இயற்கை தரும் எண்ணற்ற வளங்களை மக்கள் பொதுவுடைமைக் கொள்கையுடன் பகிர்ந்து நுகர்கிறார்கள். மனிதருணவை மனிதர் பறிக்கும் வழக்க மினியுண்டோ! மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை யினியுண்டோ? புலனில் வாழ்க்கை யினியுண்டோ? நம்மிலந்த வாழ்க்கை யினியுண்டோ! இனிய பொழில்கள் நெடிய வயல்கள் எண்ணரும் பெரு நாடு . கனியுங் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றித் தரு காடு-இது கணக்கின்றித் தரு நாடு-நித்தகித்தம் கணக்கின்றித் தருநாடு வாழ்க -பாரதியார் : பாரத சமுதாயம், 1 இனியொரு விதி செய்வோம்-அதை எந்த நாளும் காப்போம் தனியொரு வனுக்குணவிலை யெனில் ஜகத்தினை யழித்திடுவோம்-வாழ்க -பாரதியார் ; பாரத சமுதாயம், 3