பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 பாரதியும் பாரதிதாசனும் எல்லோரு மோர்குலம் எல்லாரு மோரினம் எல்லாரு மிக்திய மக்கள் எல்லாரு மோர்நிறை எல்லாரு மோர்விலை எல்லாரும் இந்நாட்டு மன்னர் நாம் எல்லாரும் இங்காட்டு மன்னர்-ஆம் எல்லாரும் இக்காட்டு மன்னர்-வாழ்க -பாரதியார் ; பாரத சமுதாயம், 4 "எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற ஒப்பற்ற தாரக மந்திரத்தை உலகிற்கு வழங்கிய உயர் பேரறிவாளராகப் பாரதியார் திகழ்கின்றனர். பாரதநாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழவேண்டும் என்ற உயர்நோக்கத்தைப் பாரதியார் ஒரி அழகிய சொற்சித்திரத்தின் வாயிலாக உணர்த்தி விடுகின்றார். சிந்துநதியில் ஒரு முழு நிலவு நாளில் சேர நன்னாட்டுப் பெண் தன் அருகில் அமர்ந்திருக்க அங்குச் சுந்தரத் தெலுங்கிற் பாட்டிசைத்துத் தமிழர் தோணி களோட்டி வருவர் என்கிறார் பாரதியார். o சிந்து கதியின் மிசை நிலவினிலே சேர கன் நாட்டிளம் பெண்களுடனே சுந்தரத் தெலுங்கினிற் பாட்டிசைத்துத் தோணிக ளோட்டிவிளை யாடிவருவோம் -பாரதியார் : பாரததேசம், 5 கங்கை நதிப்புறத்தில் விளையும் கோதுமைப் பண்டத்திற்குக் காவிரிக் கரையில் விளையும் வெற்றிலையைப் பண்டமாற்றிக் கொள்ளலாம் என்கிறார். சிங்க மராட்டிய8 கவிஞர்தம் கவிதைக்குச் சேரநாட்டு யானைத் தந்தங்களைப் பரிசளிக்கலாம் என்கிறார். காசிநகர்ப் புலவர் ஒருவர் பேசும் உரையினைக் காஞ்சியி