பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

à.aif. 135 லுள்ளார் கேட்பதற்கு ஒரு கருவி அமைப்போம் என்கிறார். இராசத்தானத்து வீரம் மிக்க இளைஞர்க்குக் கன்னட நாட்டிற் கிடைக்கும் தங்கத்தைப் பரிசாக அளிப்போம் என்கிறார். "மக்கள் ஆக்கா மனுவேந்தர்கள் கவிஞர்கள்" என்பார் கவிஞர் ஷெல்லி. அம்முறையில் கவியரசர் பாரதியாரும் அரசியல் நடாத்தும் உயர் அலுவலர்க்கான சில எண்ணவோட்டங்களையும் அவர்கள் செயல்பட வேண்டுவதன் சிறப்பினையும் புலப்படுத்துகின்றார். வெள்ளிப் பனிமலையின் மீதுலாவுவோம்-அடி மேலை கடல் முழுதும் கப்பல் விடுவோம் பள்ளி தலமனைத்துங் கோயில் செய்குவோம் எங்கள் பாரத தேசமென்று தோள் கொட்டுவோம் சிங்களத் தீவினுக்கோர் பாலமமைப்போம் சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம் வங்கத்தி லோடிவரும் நீரின் மிகையால் மையத்து காடுகளில் பயிர் செய்குவோம். -பாரதியார் : பாரததேசம் 1, 2 ஒர் அடிப்படை நியதி சமுதாயத்தில் ിയഖബേങ്ങ@മ என்றும், அவ்வாறு நிலவினால் நன்மைகள் பிறக்கும் என்றும் பாரதியார் நம்புகின்றார். சாதி இரண்டொழிய வேறில்லையென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்த மென்போம் நீதி நெறியினின்று பிறர்க்குதவும் நேர்மையர் மேலவர் கீழவர் மற்றோர். -பாரதியார்; பாரத தேசம் 1, 3