பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$seart. 127 யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ தெங்கும் காணோம் -பாரதியார் : தமிழ், 1 என்றும், தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டோர் இங்கமரர் சிறப்புக் கண்டார் -பாரதியார் : தமிழ், 4 என்றும் தமிழைச் சிறப்பித்துப் பாடும் பாரதியார் தமிழ் காலத்திற்கேற்ப வளரவேண்டும் என்றும் அவாவுகின்றார். தமிழ்த்தாயின் கூற்றாக அமைந்திருக்கும் tisfl-di) இதற்கோர் நல்ல எடுத்துக்காட்டாகும். தமிழ்த்தாய் தன் மக்களைப் பார்த்துப் புதிய சாத்திரம் வேண்டி, நிற்கிறார். இன்றொரு சொல்லினை கேட்டேன்-இனி ஏதுசெய் வேன்? என தாருயிர் மக்காள்! கொன்றிடல் போலொரு வார்த்தை-இங்கு கூறத்தகாதவன் கூறினான் கண்டீர்! புத்தம் புதிய கலைகள்- பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவும் கூடுவதில்லை - அவை சொல்லுக் திறமை தமிழ் மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும்-அந்த மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திட லாமோ?