பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 பாரதியும் பாரதிதாசனும் சென்றிடுவி ரெட்டுத் திக்கும்-கலைச் செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பிர் -பாரதியார் : தமிழ்த்தாய், 8, 9, 10, 11 என்று குறிப்பிட்டதோடன் றித் தமிழில் ஆக்கம் பெறுதற் குரிய புதிய வழிமுறைகளையும் புல்ப்படுத்தி நிற்கிறார். பிற நாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பல கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை திறமான புலமை யெனில் வெளிநாட்டார் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும். - - i. -பாரதியார்: தமிழ், 3 பாரதியாரை முழுக்க முழுக்க ஒரு மக்கள் கவிஞராகக் காட்டுவது அவர்தம் விடுதலைப் பாடலாகும். அப் பாட்டில் அவர் பறையர் புலையர்க்கும் பறவர், குறவர், மறவர்க்கும் ஒருங்கே விடுதலை வழங்குகின்றார். ஏழை யென்றும் அடிமையென்றும் இந்தியாவில் எவருமில்லை என்கிறார். எல்லோரும் கல்வியும் செல்வமும் எய்தி வாழலாம் என்கிறார். மாதா தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்தி, ஆண்களும் பெண்களும் சரிசமானமாக வாழவேண்டும் என்று வற்புறுத்துகின்றார். பெண் விடுதலைக்குப் பாடிய பெருங் கவிஞராகப் பாரதியார் துலங்குகின்றார். பெண்மை வாழ்கவென்றும், பெண்மை வெல்கவென்றும் கூத்தாடுகின்றார். காதற் பெண்கள் கடைக்கண் பணியிலே காற்றிலேறியவ் விண்ணையுஞ் சாடுவோம்’ என்கிறார். --