பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பாரதியும் பாரதிதாசனும் கண்கள் இரண்டினில் ஒன்றைக்-குத்திக் காட்சி கெடுத்திட லாமா! பெண்க ளறிவை வளர்த்தால்-வையம் பேதைமை யற்றிடுங் காணி. - பாரதியார் : முரசு, 9 பாரதியார் "பாப்பாப்பாட்டுப் பாடியிருப்பது அவர் பாப்பா முதல் பெரியவர்வரை அனைவர்க்கும் கவி பாடியவர் என்பதைக் காட்டும். "ஒடி விளையாடு பாப்பா, நீ ஒய்ந்திருக்கலாகாது பாப்பா" என்ற எளிய பாட்டில் எத்துணை பெரிய கருத்துகளை வைத்துவிடுகின்றார். சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவங் திே உயர்ந்தமதி கல்வி-அன்பு கிறைய உடையவர்கள் மேலோர் என்று கூறி, துன்பம் நெருங்கி வந்த போதும் நாம் சோர்ந்துவிட லாகாது பாப்பா அன்பு மிகுந்த தெய்வமுண்டு துன்பம் அத்தனையும் போக்கிவிடும் பாப்பா உயிர்களிடத்தில் அன்பு வேணும்-தெய்வம் உண்மையென்று தானறிதல் வேனும் வயிரமுடைய நெஞ்சு வேணும்;-இது வாழும் முறைமையடி பாப்பா - -பாரதியார் : பாப்பாப்பாட்டு, 15, 9, 16 என்று பாப்பாவிற்கும் வாழும் முறையினை வகையுறக் கற்றுக்கொடுத்து விடுகிறார். - -