பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 131 காக்கை குருவி எங்கள ஜாதி-ள்ே கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்கும் திசையெல்லாம் காமன்றி வேறில்லை நோக்க நோக்கக் களியாட்டம் -பாரதியார் : ஜெயபேரிகை 3 என்று பாரதி உலக உயிர்கள் அனைத்தையுமே ஒன்றாகக் காணும் பெருநோக்கு கொண்ட கவிஞராகத் திகழ்கிறார். எனவேதான், தனியொருவனுக் குணவிலையெனில் == -பாரதியார் : பாரத சமுதாயம், 2 என்று முழங்குகின் றார். மன்னரேயாயினும் அவர்கள் மக்களைக் காக்கக் கடமைப்பட்டவர்களேயன்றித் துன்புறுத்தும் உரிமை படைத்தவர் இல்லை என்பதனைப் பாஞ்சாலி சபதத்தில் புலப்படுத்துகின்றார். தருமன் நாட்டை வைத்து இழந்தது, கோயிற் பூசை செய்வோன் சிலையைக் கொண்டு விற்றல் போலவும், வாசல் காத்து நிற்போன் வீட்டை வைத்திழத்தல் போலவும் உள்ளது என்கிறார். நாட்டு மக்களை நரர்களாக வேந்தர்கள் கருதிவிடக் கூடாது என்கிறார். குடிமக்களைக் கொடுமைப்படுத்தும் கொற்றவர்கள் வாழ்வு நீண்டகாலம் நிலைப்பதில்லை என்பதனை "இமயமலை வீழ்ந்ததுபோல் வீழ்ந்து விட்டான் ஜார் அரச" என்றும், புயற்காற்றுச் சூரதனில் திமுதிமுவென மரம் விழுந்து காடெல்லாம் விறகான செய்திபோலக் கொடுங்கோலர்கள் தலை சாய்ந் இ) விட்டார்கள் என்றும் புலப்படுத்துகின்றார்.