பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. பாரதியின் தொலைநோக்கு முப்பத்தொன்பதே ஆண்டுகள் வாழ்ந்த பாரதியார் தாட்டிற்கும் மொழிக்கும் மக்களுக்கும் உழைத்த உழைப்பு மிகுதியாகும். பொருள் உடையவர்களைப் பார்த்துப் பாராட்டுப் பாடல்கள் பாடி அவர்களின் உள்ளத்தைக் குளிரச் செய்து அவர்கள் தரும் பொருளால் வாழ்ந்து வருவதே புலவர் கொழில் என்றிருநத அவல நிலைமை யினை மாற் றியமைத்தவர் மகாகவி பாரதியார் ஆவர். பாரதியும் எட்டையபுர அரசருக்குச் சி. டுக.கவி எழுதியவர் காம். ஆயினும் அவர் பாடலில் கவிமிடுக்கு இருந்தது. எட்டையபுர சமத்தானப் புலவர்களால் இளம் வயதிலேயே பாராட்டப்பெற்ற பாரதியார், அவர்களால் 'பாரதியார்' என்ற படடமும் வழங்கப் பெற்றார். சமத்தானத்துப் புலவர்கள்போல் வாழாமல் பாரதி புதுமைக் கருத்துகளுடன் வாழ்நதார்.ஒரு முறை எட்டைய புர மன்னர் பாரதியார் சென்னை செல்லும்போது கொடுத்த பணம் முழுவதிற்கும் புத்தகங்களாக வாங்கி வந்துவிடடார். தம் மனைவிக்கு ஒரு புடவை வாங்கி வநது அவர்தம் மனத்தை மகிழச் செய்யவேண்டுமே எனற எண்ணங்கூடப் பாரதிக்கு எழவில்லை. எல்லா வகைகளிலும் பாரதியார் புதுநோக்கிலும் புதுப் போக்கி லும் திகழ்ந்தார் என்பதனை அவருடைய இளமைக்கால வாழ்வு தொடக்க முதல் நன்கு காணலாம். பாரதியார் மறைந்து எழுபது ஆண்டுகள் கடந்து விட்டாலும் இன்னும் அவர் சிநதனைகள் செயலுருவம் பெறவில்லை என்பதனைப் பார்க்கறோம். எனவே