பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 பாரதியும் பாரதிதாசனும் பாரதியார் இன்றைக்கும் நமக்கு வேண்டியவராகப் படுகிறார். அவருடைய பாடல்கள் இன்றும் நடப்புப் பொருத்தம் உடையதாகக் கால இயைபு உடையதாக அமைந்து துலங்குவதனைக் காணலாம். எனவே அவர் காலங்கடந்தும் வாழும் கவிஞராகவும். காலகாலத்திற்கும் அவர் தந்த கருத்துக் கருவூலங்கள் மன்பதைக்கு மனித சமுதாயத்திற்கு உரமூட்டுவனவாகவும் அமைந்திலங்கக் காணலாம். - முதலாவதாக நாட்டு மக்கள் நல முற்று வாழ ஒற்றுமை என்னும் உயர் பண்பினைப் பெற்றவர்களாக வேண்டும் என்பது பாரதியாருடைய திண்ணமான எண்ணமாகும். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்நத திருவள்ளுவர் பெருமான், o - பிறப்பொக்கும் எல்லா வுயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான் s (குறள்; 972) என்றார். பாரதியார் இந்தக் கருத்தினைப் பல கோணங் களில் நின்று வலியுறுத்தக் காணலாம். பல்வேறு வண்ணங் களையுடைய பூனைக் குடும்பம் ஒன்றனை எடுத்துக் கொண்டு பல்வேறு எண்ணங்களையுடைய மனிதர் களிடையில் ஒற்றுமை மலரவேண்டும் என்று வற்புறுத்து கின்றார். எந்த நிறமிருந்தாலும் அவை யாவும் ஒரே தரமன்றோ? இந்த நிறம் சிறிதென்றும் இஃது ஏற்றமென்றும் சொல்லலாமோ? என்று வினாவிடுத்துப் பின்வருமாறு விடையையும் கூறி. ஒற்றுமையுணர்வை உறுதிப்படுத்துகிறார் பாரதியார்.