பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§.com’. 135 வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் அதில் மானுடர் வேற்றுமையில்லை எண்ணங்கள், செய்கைகள் எல்லாம்-இங்கு யாவர்க்கும் ஒன்றெனல் காணிர். சாதிக் கொடுமைகளால் இன்னும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கலவரங்கள் நடைபெறுவது இன்னும் நிற்க வில்லை. இந்த நிலைமையில் பாரதி அேைற கூறிய அறிவுரைகளை நோக்குவோம் : சாதிப்பிரிவுகள் சொல்லி-அதில் தாழ்வென்றும் மேலென்றும் கொள்வர் திேப் பிரிவுகள் செய்வார்-அங்கு நித்தமும் சண்டைகள் செய்வார் சாதிக் கொடுமைகள் வேண்டாம்-அன்பு தனில் செழித்திடும் வையம். பிறப்பால் உயர்வு தாழ்வு இல்லை, வாழும் நெறி யாலேயே ஒருவர் மதிக்கப்பட வேண்டும் என்று கருதினார் பாரதியார். எனவே அவர். கந்தனைப் போல் ஒரு பார்ப்பான் இந்த காட்டினில் இல்லை: குணம் கல்லதாயின் எந்தக் குலத்தரேனும் உணர் வின்பம் அடைதல் எளிதெனக் கண்டோம். என்று பாடினார். பெரியவர்களுக்குச் சொல்லிச் சொல்லி அலுத்துப் போன பாரதியார் பாப்பாவுக்குப் ;பாட்டுச் சொல்லி அப் வாட்டில் வாழும் உயர்நெறிபினை உணர்த்துகின்றார்.