பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. Lum. ፲3ፇ என்றும் அன்பு முழக்கம் செய்கிறார் பாரதியார். இந்தக் கருத்துக் கொண்ட காரணத்தினாலேதான் பாரதியார்" உயிருள்ள பொருள்களையும் உயிரல்லா பொருள்களையும் ஒன்றாகக் கண்டு உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றும் என்று தெளிந்து ஆன்மநேய ஒருமைப்பாட்டினை இசைக்கக காணலாம். காக்கைக் குருவி எங்கள் சாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் நோக்குங் திசையெலாம் நாமன்றி வேறிலை நோக்க நோக்கக் களியாட்டம் என்ற பாட்டு அவருடைய பரந்துபட்ட சிந்தனையை விளக்கவில்லையா? அடுத்தபடியாக மனித இனத்தின் சரிபாதிப் பகுதி யான பெண்கள் அடிமைகளாய் நடத்தப்படுவதைக் கண்டு கொதித்தெழுந் கவர் பாரதியார். "அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?", "பெண் புத்தி பின் புற்தி", தையல் சொல் கேளேல்", "சேலை கட்டிய மாதரை நம்பனால் தெருவில நின்று தயங்கித் தவிப்பரே" என்றெல்லாம் புன்மொழிகள் எழுந்ததனை எண்ணிப் பார்க்கிற பாரதி, பெண்ணுக்கு விடுதலை நீர் இல்லையென்றால் பின்னிந்த உலகினிலே வாழ்க்கை இல்லை என்று வன்மையுடன் உரைக்கின்றார். பெண்டாட்டி தன்னை அடிமைப்படுத்த வேண்டி பெண்குலத்தை முழுதடிமைப் படுத்தலாமோ?