பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 பாரதியும் பாரதிதாசனும் பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் புவிபேணி வளர்த்திடும் ஈசன் மண்ணுக்குள்ளே சில மூடர் நல்ல மாதர் அறிவைக் கெடுத்தார் கண்களிரண்டினி லொன்றைக் குத்திக் காட்சி கொடுத்திடலாமோ? பெண்கள் அறிவை வளர்த்தால் வையம் பேதமை அற்றிடும் காணிர் என்று விடையையும் விளக்கமாகக் தருகின்றார். எனவே "புதுமைப்பெண்ணைப் படைத்துத் தம் கவிதையில் உலவ விடுகின்றார். பாரதி படைக்கும் புதுமைப் பெண்ணைக் காண்போம். சாத்திரங்கள் பலபல கற்பராம் சவுரியங்கள் பலபல செய்வராம் மூத்த பொய்மைகள் யாவும் பழிப்பராம் முடக்கட்டுக்கள் யாவும் தகர்ப்பாராம் காத்து மானிடச் செய்கை யனைத்தையும் கடவுளர்க்கினிதாகச் சமைப்பராம் ஏத்தியாண் மக்கள் போற்றிட வாழ்வராம் இளைய நங்கையின் எண்ணங்கள் கேட்டிரோ. இந்தப் புதுமை பெண்கள் சாதம் படைப்பதோடு தெய்வச் சாதி படைக்கவும் கூடியவர்கள். எனவே அவர்கள், பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் கடத்த வந்தோம் எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி