பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.சி. TNT'- 139 என்று கொம்மாளமிட்டுக் கும்.மியடிக்கிறார்கள். இப் புதுமைப்பெண்கள் "கண்டதே காட்சி; கொண்டதே கோலம்" என்று வாழ்பவர்கள் அல்லர். இவர்களுக்கும் உயர்ந்த குறிக்கோள்கள் உண்டு. அக் குறிக்கோள்கள் தாம் iயாவை? அவர்கள் வாயாலேயே கேட்போம் : காதலனொருவனைக் கைப்பிடித்தே அவன் காரியம் வாவினுங் கைகொடுத்து மாத ரறங்கள் பழமையைக் காட்டிலும் மாட்சி பெறச் செய்து வாழ்வமடி எனவேதான் பாரதியார் பெண்ணுரிமை பேணிய கவிஞராக, பெண் விடுதலை எனும் வைகறை வாணுற்குப் பூபாளம் இசைத்த இசைவாணராகத் துலங்குகின்றார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் வைய வாழ்வு தன்னில் எந்த வகையினும் கமக் குளே தாதர் என்ற நிலைமை மாறி ஆண்களோடு பெண்களும் சரிநி கர்சமானமாக வாழ்வம் இந்த நாட்டில்ே. என்று பாரதி முழங்கிய முழக்கம் இன்றும் தேவைப்படு கின்றது. மூன்றாவதாக. பாரதத் திரு நாட்டில் வாழும் பலர் இன்றும் நாட்டுப்பற்று அற்றவராக விளங்குவதனைக் காண்கிறோம். அனணியனான ஆங்கிலேயன் ஆட்சியே மேல் என்ற அளவிற்குக்கூட அன்னிய மோகம் பிடித்து, விடுதலை வேட்கையற்று வாழும விநதை மனிதர் பலரை