பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 aாரதியும் பாரதிதாசனும் பாரதியாரை விஞ்சி நிற்கிறார் பாரதிதாசன். அவருடைய "அழகின் சிரிப்பு காலங்கடந்தும் வாழப்போகும் அரிய நூலாகும். பாரதியாரின் காணி நிலம் வேண்டும்" என்னும் பாடல் ஆழ்ந்த கவியுள்ளத்தின் பிரதிபலிப்பாகும். அப் பாடலைக் காண்க. காணி நிலம்வேண்டும் பராசக்தி காணி நிலம்வேண்டும்;-அங்கு தூணில் அழகியதாய்-கன்மாடங்கள் துய்ய நிறத்தினதாய்-அந்தக் காணி நிலத்திடையே-ஓர் மாளிகை கட்டித் தரவேண்டும்;-அங்கு கேணியருகினிலே-தென்னைமரம் கீற்று மிளநீரும் பத்துப் பன்னிரெண்டு-தென்னைமரம் s பக்கத்திலே வேணும்; - நல்ல முத்துச் சுடர்போல நிலாவொளி முன்பு வரவேண்டும்;-என்றன் சித்தம் மகிழ்ந்திடவே-நன்றாயிளக் தென்றல் வரவேணும்; பாட்டுக் கலந்திடவே-அங்கேயொரு பத்தினிப் பெண்வேணும்-எங்கள் கூட்டுக் களியினிலே-கவிதைகள் கொண்டு தரவேணும்-அந்தக் காட்டு வெளியினிலே;-அம்மா; நின்றன் காவலுற வேணும்!-என்றன் பாட்டு திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்.