பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$3.arp. 141 கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று கூறி, வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு -நெஞ்சை அள்ளும் சிலப்பதி காரமென் றோர்மணி யாரம் படைத்த தமிழ்நாடு என்றும் பாடித் தமிழர்க்குத் தமிழ் நாட்டுப்பற்றை ஊட்டு கின்றார். அடுத்து, தமிழ்மொழிப் பற்றினைத் தமிழர்க்கு ஊட்டுகின்ற தொண்டில் திளைக்கின்றார் பாரதியார். -பாப் பாவுக்கும் விளங்கும் வகையில் எளிய தமிழில் தமிழின ஏற்றத்தினை எடுத்துரைக்கின்றார் அவர். சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே-அதைத் தொழுது படித்திடடி பாப்பா என்று த மிழமொழியி ன அருமையை விளக்குகின்றார். யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனித வ தெங்கும் காணேன் என்று கூறி. பாமரராய் விலங்குகளாய் உலக னைத்தும் இகழ்ச் சொலப் பான்மை கெட்டு காமமது தமிழரெனக் கொண்டிங் கு எ ஈழ திடுதல் நன்றோ? சொல்லிர் தேமதுரைத் தமிழோசை உலகமெலாம் * பரவும் வகை செய்தல் வேண்டும் என்று கமிழர் ஆற்ற வேண்டிய அருங்கடனையும் புலப்படுத்துகின்றார்.