பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 பாரதியும் பாரதிதாசனும் பாரதி மறைந்து எழுபது ஆண்டுகளாகியும் இன்னும் தமிழில்-தமிழ் நாட்டில் அறிவியல் முன்னேற்றம் அடையவில்லை. இதனை அன்றே உணர்ந்து பின்வருமாறு. பாடினார் பாரதி. புத்தம் புதிய கலைகள்-பஞ்ச பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும் மெத்த வளருது மேற்கே-அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை சொல்லவுங் கூடுவ தில்லை-அவை சொல்லுந் திறமை தமிழ்மொழிக்கில்லை மெல்லத் தமிழினிச் சாகும் அந்த மேற்குமொழிகள் புவிமிசை யோங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்-ஆ! இந்த வசையெனக் கெய்திடலாமோ சென்றிடுவி ரெட்டுத்திக்கும்-கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சோப்பிர் என்று ஆக்க வழியில் தமிழ் வளர்வதற்குரிய அருஞ்செயல் களைப் புலப்படுத்தினார். அவர் பின்வருமாறு: குறிப்பிட்டுள்ள செயல்கள இன்றும் முற்றும் நிறைவேறா மல் நின்றுகொண்டிருப்பதனைக் காணலாம். பிறகாட்டு கல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் இறவாத புகழுடைய புதுநூல்கள். தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை திறமான புலமையெனில் வெளிநாட்டோர் அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.