பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 143 பாரதியார் உழவினையும், தொழிலினையும் போற்றியவர். சுறுசுறுப்பாக உழைக்கவேண்டும் என்று வற்புறுத்தியவர். சோம்பல் மிகக் கெடுதி" என்று சொன்னவர். எத்தித் திரிபவரை வெறுத்தவர். எனவே வீணுக்கு உழைக்காமல் வீணருக்கு உழைக்காமல் வாழ வேண்டும் என்று வற்புறுத்தினார் பாரதியார். எல்லோரும் ஓர்கிறை எல்லோரும் ஓர்விலை எல்லோரும் இங்காட்டு மன்னர் என்ற நிலை ஏற்பட்ட பிறகு, "மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கமும்', 'மனிதர்;நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கையும் இனி இருக்கக்கூடாது என்று பாரதியார் உறுதியாக எண்ணினார். எனவே புரட்சிச் சமுதாயத்தைப் பின்வருமாறு தம் அகக்கண்ணால் கண்டார். முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொது உடைமை ஒப்பில்லாத சமுதாயம் உலகத் துக்கொரு புதுமை என்று கூறி, இனியொரு விதி செய்வோம்-அதை எந்தகாளும் காப்போம்; தனியொருவனுக் குணவிலை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று ஆவேசமாக் முழங்கினார். கல்வி வளர்ச்சியே மனவளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, -