பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 1 4.5 களில் குடிக்கும் தண்ணிருக்கும் பற்றாமை ஏற்பட்டு மக்கள் சொல்லொணாத் துன்பத்திற்கு ஆட்பட்டு அல்லல் உறுவதனைக் காணலாம். பாரதி அன்றே இதை உணர்ந்தவர்போல், வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செங்குவோம் என்று பாடினார். இவ்வாறு பாரதியாரின் தீர்க்க தரிசனம் அரசியல், சமூகம், பொருளாதாரம், தமிழ்மொழி தமிழ்நாடு என்று பல துறைகளிலும் பளிச்சிடக் காணலாம். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறுவதுபோலப் பாரதியார் காடு கமழவரும் கற்பூரச் சொற்கோவாகவும். "நீடுதுயில் நீக்கப் பாடிவந்த நிலாவாகவும் புதிய அறம் பாடவந்த மறவனாகவும் துலங்குகின்றார் எனலாம். பாரதியின் தொலைநோக்கு அவர்தம் மதிநலம் காட்டும்; அவர் பாடல்கள் இன்றும் பொருத்தமாயிருப்பது அவர்தம் தொலைநோக்குச் சிந்தனையை உணர்த்தா நிற்கும். எனவே பாரதி பாட்டுக்கொரு புலவனாகவும். நாட்டு மக்கள் வாட்டம் நீக்க வந்த கவிக்குயிலாகவும், புரட்சி நோக்கும் புத்துலகச் சிந்தனையும் கொண்ட அறிஞராக வும் விளங்குகிறார் என்பது வெள்ளிடைமலை. எனவே அவர் காலங்கடந்தும் வாழும் கவிஞராவார். kin.i.am.-10