பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. பாவேந்தர் பாரதிதாசனாரின் அழகின் சிரிப்பு நூலாசிரியர் இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய வரலாற்றில் தமக்கெனத் தனித்ததோர் இடம்பெற்றுத் திகழ்பவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களாவர். புதுச்சேரியிற் oo so). என்பாரின் மகனாராகத் தோன்றிய இவருடைய இளமைக் காலப் பெயர் சுப்புரத்தினம் என்பதாகும். கனக சுப்புரத்தினம் என வழங்கப்பெற்ற இவர் இளமையிலேயே பிரெஞ்சுக் கல்வி பயன்றார். தக்க தமிழாசிரியர்களிடம் தமிழ்க் கல்வி பயின்ற இவர் தமிழ்ப் புலமை மிகுந்தவராய் விளங்கினார். பாரதியார் தொடர்பால் முதன்முதலாக இவர் இயற்றிய கவிதை வெளியுலகிற்கு அறிமுகப்படுத்தப்பெற்றுப் பின், கதேசமித்திர இதழுக்கு அனுப்பப்பெற்றது. அப் பாடலே "எங்கெங்குக் காணினும் சக்தியடா, ஏழ்கடல் அவள் நிற வண்ணமடா" என்று தொடங்கும் பாடலாகும். தமிழ்ப் பற்றைக் கிளறுவனவாகவும் தமிழினப்பற்றை ஊட்டுவனவாகவும் இவருடைய பாடல்கள் அமைந் துள்ளன. உணர்ச்சி வெள்ளம் என இவருடைய பாடல் களைச் சுட்டலாம். சந்த நயமும் இவர் பாடல்களில் கொப்பளித்து நிற்கக் காணலாம். காதல், இயற்கை என்னும் இரு பொருள்கள் பற்றி இவர் இயற்றியுள்ள கவிதைகள் போல இந் நூற்றாண்டில் வேறு எவரும் சிறப் பாக இயற்றவில்லை என்று கூறும் அளவிற்கு இவ்விரு