பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 பாரதியும் சாரதிதாசனும் துறைகளிலும் இவரதுபாடல்கள் சிறந்து விளங்குகின்றன. சுருங்கச் சொன்னால் சங்க இலக்கியத்தின் பெற்றியினை இவருடைய கவிதைகள் பிரதிபலித்து நிற்கக் காணலாம். நூல் சங்க இலக்கியங்களில் அகப்பொருள் என நுவிலப்படு வனவற்றின் பாடுபொருளாக விளங்கியது காதல் என்னும் உரிப்பொருளாகும். இக் காதல் சிறக்க விளங்கிய களம் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை முதலான நிலைக்களங்களாகும். இந்நிலங்களின் பரப்பில் இயற்கை யின் பின்னணியில் காதல் என்னும் வாழ்க்கையின் உரிப் பொருள் துலங்கியது எனலாம். இயற்கையின் பின்னணி யில் மனித வாழ்க்கையைப் புலப்படுத்தி நின்றவை சங்க இலக்கியங்கள் எனலாம். s அவ்வகையில் இங்குப் பாடமாக வைக்கப்பெற்றுள்ள "அழகின் சிரிப்பு என்னும் நூலின் பாடுபொருள் (Subject matter) இயற்கையாக அமைந்திலங்கக் காண லாம். இதனைக் கவிஞரே தம் நூலின் முன்னுரையிற் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கக் காணலாம். இயற்கை அனைத்தும் அழகே அந்த அழகு செந்தாமரை என்றும், நிலவென்றும், கதிரென்று சிரித்தது. இயற்கைப் பொருள் ஒவ்வொன்றும் பத்து அறுசீர் விருத்தங்களால் - எளிய நடையில் சித்திரிக்கப் படுகிறது. காணும் பொருளிலெல்லாம் அழகைக் காணவும், கண்டவாறு தாமேயாகச் சொல்லோவியம் செய்யவும் திறம் பெறுதல் வேண்டும் தமிழர்கள்,