பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5A.carr. 151 பிறமொழி, தமிழ்மொழி நூற்களில் பார்த்த படியே எழுதும் நிலை தீர வேண்டும். அதற்கு இச்சிறு நூல் இயற்றியதன் வாயிலாக நான் இதை அறிஞர்க்கு நினைவுறுத்துகிறேன். இவ்வகையில் எழுந்த நூல் அழகின் சிரிப்பு எனலாம். மேலை நாட்டில் 'ஏரி வட்டக் கவிஞர்" (Lake Poet) எனப் புகழப்பெறும் வோர்ட்ஸ் வெர்த் (words Worth) இயற்கை குறித்துக் கவிதைகள் புனைவதில் இணையற்றவர் என்று ஆங்கில இலக்கியம் நுவலும். அவ்வகையில் தமிழ்க் கவிஞர்களில் இயற்கையை இணையற்ற வகையில் அழகுற எழிலுற வருணித்துப் பாடியவர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எனலாம். - இச் சிறுநூலின் முதல் பகுதி 'அழகு என்பதாகும். இப்பகுதியில் தாம் அழகினைக் கண்டவிடங்களை யெல்லாம் கவிஞர் தெளிவுற விளக்குகின்றார். இதை யடுத்து, கடல், தென்றல், காடு, குன்றம், ஆறு, செந்தாமரை, ஞாயிறு, வான், ஆல், புறாக்கள், கிளி, இருள் முதலிய பன்னிரண்டு பொருட்களைப் பற்றிய கவி தைகள் மணக்கின்றன. இறுதியில் சிற்றுார், பட்டணம் தமிழ் என்னும் மூன்று பொருட்களை நம் முன் காட்டி யுள்ளார் கவிஞர்; அறுபத்து நான்கு பக்கங்களே கொண்ட இந்நூலின் முழுக்க மனப்பாடம் செய்து கொள்ளும் வகையில் கவிஞர் இயற்றியுள்ளது பாராட்டத்தக்கது. பாரதிதாசனாரின் சிறந்த நூல்களில் இஃது ஒன்று என அட்டியின்றிக் கூறலாம். அழகு அழகு என்பது கவிஞர்க்கு எங்கெங்கே கவிதை வழங் கியது என்பதனை அழகுறப் புலப்படுத்தும் போக்கிலும்