பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. 13 பாரதிதாசன் அழகினை எங்கெங்கெல்லாம் காண் கின்றார் என்பதற்கு "அழகின் சிரிப்பு’ என்னும் நூலில் அமைந்துள்ள பின்வரும் பாடல்கள் சான்றுகளாகும். காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன் கடற்பரப்பில் ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே மலர்களிலே, தளிர்கள் தம்மில், தொட்டஇடம் எலாம்கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள்; ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டக் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள் சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் நின்றாள் திருவிளக்கிற் சிரிக்கின்றாள். நாரெடுத்து ாறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள் -அழகின் சிரிப்பு : 1, 2 மேலும் பாரதிதாசனின் கீழ்க்காணும் கவிதைகளை யும் கருத்திற் கொள்ளவேண்டும். முழுமைகிலா! அழகுகிலா! முளைத்தது விண்மேலே!-அது பழமையிலே புதுகினைவு பாய்ந்தெழுந்தாற் போல! குருட்டு விழியுந் திறந்ததுபோல் இருட்டில் வான விளக்கு -இசையமுது : நிலவு