பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 52 o பாரதியும் பாரதிதாசனும் நோக்கிலும் மூன்று பாடல்கள் முகவுரையாக-தோரண வாயிலாக அமைந்திருக்கக் காணலாம். காலையில் கீழ்த்திசையில் எழுகின்ற எழு ஞாயிற்றின் கதிரொளியில் அழகு தென்படுகின்றது; கடற் பரப்பின் வெள்ளிய மணல்மெத்தை அடுக்கில் அழகுதுலங்குகின்றது. வைகறைப்போதில் ஓடை நீரில் எழும் ஒளியிலும் சலனத் திலும் அழகு மிளிர்கின்றது. சோலையில், மலர்களில், தளிர்களில்-மேலும் தொட்ட இடங்களிலெல்லாம் அழகு தட்டுப்பட்டது. மாலை நேரத்தில் மேல்வானத்தில் மறையும்போது ஒளிரும் மாணிக்கச்சுடரில் அழகு குலுங்கு கின்றது. ஆலஞ்சாலையில் கிளைதோறும் அமர்ந்து ஒலியெழுப்பிக் கொண்டிருக்கும் கிளியின் கூட்டத்தில் அழத புலப்பட்டு, அவ்வழகு கவிஞர்க்குக் கவிதை பாட உணர்வூட்டிப் பாடுபொருளாய் விளங்குகின்றது. நெஞ்சிலே என்றும் நிறுத்த வேண்டிய அப்பாடலைக் காண்போம். காலையிளம் பரிதியிலே அவளைக் கண்டேன்! கடற்பரப்பில், ஒளிப்புனலில் கண்டேன்! அந்தச் சோலையிலே, மலர்களிலே தளிர்கள் தம்மில் தொட்டஇடம் எலாம் கண்ணில் தட்டுப்பட்டாள்! மாலையிலே மேற்றிசையில் இலகு கின்ற மாணிக்கச் சுடரிலவள் இருந்தாள் ஆலஞ் சாலையிலே கிளைதோறும் கிளியின் கூட்டங் தனில் அந்த அழகென்பாள் கவிதை தந்தாள். மேலும் அழகு கவிதை தரும் இடங்களாகப் பின் வரும் இடங்களைக் கவிஞர் குறிப்பிட்டுச் சொல்கிறார். சிறுகுழந்தை விழியினில் தென்படும் ஒளியில் அழகு இலங்குகின்றது. அமைதியாக எரியும் குத்துவிளக்கில்