பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6я.cат. 153 - அழகு பளிச்சிடுகின்றது. நார்கொண்டு பூக்களைத் தொடுத்து மாலையாக்கும் நங்கையின் விரல் வளைவின் நாடகத்தில் அழகு நடமிடுகிறது. வைகறை நேரத்தில் சிற்றுார்ப் பகுதியில் தோளில் கலப்பை தாங்கி உழும் வயல் நோக்கிச் செல்லும் உழவனின் புது நடையின் பூரிப்பில் அழகு தாண்டவமாடுகிறது. நன்றாக விளைந்த நன்செய் நிலத்தின் பசுமையில் அழகு கொலுவீற்றிருக் கின்றது. இவ்வழகுகள் எல்லாம் கவிஞரின் நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சியை விளைவிக்கின்றன. அடியிற்கானும் பாடலையும் அகமனத்தின் ஆழத்தில் இடம்பெறசி செய்யுங்கள். சிறுகுழந்தை விழியினிலே ஒளியாய் கின்றாள் திருவிளக்கிற் சிரிக்கின்றாள் நாரெ டுத்து நறுமலரைத் தொடுப்பாளின் விரல்வளைவில் நாடகத்தைச் செய்கின்றாள் அடடே செந்தோட் புறத்தினிலே கலப்பையுடன் உழவன் செல்லும் s புதுகடையில் பூரித்தாள்? விளைந்த கன்செய் நிறத்தினிலே என்விழியை நிறுத்தி னாள்; என். நெஞ்சத்தில் குடியேறி மகிழ்ச்சி செய்தாள் மூன்றாவது பாடலில் அழகு துலங்கும் இடங்களைக் குறிப்பிட்டுவிட்டு, அவ்வழகு என்றென்றும் நிலைத் திருப்பது என்று கூறி, அவ்வழகின் வசப்பட்டுவிட்டால் துன்பங்கள் தொலையும். சுகம் வரும் நெஞ்சினில் என்று புலப்படுத்துகின்றார். திசையும் அழகு; வானும் அழகு. வானக் கூரையின் கீழ்ப் புலப்படும் பொருட்களும் அழகு. அசையும் கொடிகள் நிற்கும் மரங்கள் அனைத்தும் அழகே.