பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/152

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 154 பாரதியும் பாரதிதாசனும் அவ்வழகு இன்பத்தைத் தருகிறது. விருப்பந்தரும் பொருள்களில் விருப்பத்தை விளைவிக்கும் பொருள் அதுவாகும். பழமைக்குப் பழமையாயும் புதுமைக்கும் அதுமையாயும் துலங்கும் இளையவளாக அழகு விளங்கு கின்றாள். விருப்புடன் நோக்கினால் அவள் எங்கும் தென்படுவாள்; அ ந் த நல்லழகின் வசப்பம்டால் நலிவில்லை; துன்பமில்லை. திசைகண்டேன். வான் கண்டேன் உட்புறத்துச் செறிந்தனவாம் பலப்பலவும் கண்டேன், யாண்டும் அசைவனவும் நிற்பனவும் கண்டேன், மற்றும் அழகுதனைக் கண்டேன்கல் லின்பங் கண்டேன் பசையுள்ள பொருளிலெல்லாம் பசையவள் காண்! பழமையினால் சாகாத இளையவள் காண்! கசையோடு நோக்கடா எங்கும் உள்ளாள்; கல்லழகு வசப்பட்டால் துன்ப மில்லை. ஈண்டுச் சிறப்பாக எண்ணப்பட வேண்டியன வருமாறு: "ப ைச யு ள் ள பொருளிலெல்லாம் பசையவள்" என்பதும், "பழமையினால் சாகாத இளையவள்" என்பதும், "நசையோடு நோக்கினால் எங்கும் உள்ளாள்' என்பதும், "நல்லழகு வசப்பட்டால் துன்பமில்லை’ என்பதும் ஆகும். இயற்கையழகு இணையற்று விளங்கும் பலவிடங் களைப் பத்துப் பாடல்களில் பத்து அறுசீர் விருத்தங்களில் வருணிக்கும் பாவேந்தர் பாரதிதாசன் முதலாவதாகக் "கட்ல்' என்ற தலைப்பில் தம் கைவண்ணத்தை-கவிதை வண்ணத்தைக் காட்டி நிற்கிறார்.