பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(58. Eurr- 155 கடல் கடலை அறிமுகம் செய்யும் கவிஞர் புது உவமை யினைக் கையாளுகிறார்: கல்வியை மறக்காத நெஞ்சங் கொண்டவராகத் துலங்குகிறார். கடல் ஊருக்குக் கிழக்கே இருக்கிறது; அப் பெருங் கடலின் ஒரம் கீரியின் உடல் வண்ணம்போல் மணல் மெத்தை தென்படுகின்றது. அம் மெத்தை மேல் எழுந்து விழுந்து புரளும் அலைகள் கல்வி நிலையத்தில் கல்வி பயிலும் இளைஞர்கள் நெஞ்சம்போல் பூரிப்பால் ஏறும்: விழும்; புரண்டிடும். ஊருக்கு கிழக்கே உள்ள பெருங்கடல் ஓர மெல்லாம் கீரியின் உடல்வண் ணம்போல் மணல்மெத்தை அம்மெத் தைமேல் நேரிடும் அலையோ, கல்வி நிலையத்தின் இளைஞர் போலப் பூரிப்பால் ஏறும்; வீழும் புரண்டிடும் பாராய் தம்பி. அடுத்த பாடலில் மேலும் ஒர் உவமையைத் தருகிறார் கவிஞர். வெண்மை நிற அன்னக் கூட்டங்கள் விளையாடி வீழ்வதைப் போலத் துள்ளித் துள்ளி அலைகள் கரையின் மணல்மேல் சுழன்று வீழும் வெள்ளிய அலைகள் கரையைத் தொட்டுக் கடலுக்குள் சென்றுவிட்ட பிறகு, சிறுகால் நண்டுப் பிள்ளைகள் ஆடி, ஒடி விளையாடி மகிழ்ந்து காண்போர்க்கு வியப்பைச் சேர்க்கும்.