பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 - காரதியும் பாரதிதாசனும் வெள்ளிய அன்னக் கூட்டம் விளையாடி வீழ்வ தைப்போல் துள்ளியே அலைகள் மேன்மேல் கரையினிற் சுழன்று வீழும்! வெள்ளலை, கரையைத் தொட்டு மீண்டபின் சிறுகால் கண்டுப் பிள்ளைகள் ஓடி ஆடிப் பெரியதோர் வியப்பைச் செய்யும். புரட்சிக்கப்பால் அமைதி பொலிவதைப் போலக் கரையோரத்தினில் அலைகள் மோ தி க் கலங்கள் விளைக்கும்; ஆனால் நடுக்கடலில் அமைதி பொலியும். வான் கடல்நீரை:முகக்கும்; பெருங்கடல் நீர் வான் நிறம் பெறும். கடற்பரப்பைக் காண நெஞ்சம் மகிழும். கடலின் கண்கொள்ளாக் காட்சி களிப்பூட்டும், வடக்கும் தெற்கும் ஓடுநீர்ப் பரப்பும் காண இரு விழிச்சிறகால் நெஞ்சம் எழுந்திடும்; முழுதும் காண ஒரு கோடிச் சிறகுவேண்டும். செங்கதிர் கீழ்த்திசையில் கடல்மேல் எழுந்ததும் அதனுடைய தகத்தகாயக் கதிர்வீச்சு தங்கத் தூறல் கனாய் இம்மண்மீது விழுந்தன. கடல் நீர்ப்பரப்பு முழுவதும் பொன்னொலி பெற்று. மிளிரும் பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி இது! அக்கரையில் சோலை ஒன்று தென்படும்; அச் சோலை கதிரவனின் கொள்ளை அழகைத் திக்கெல்லாம் தெரியக் காட்டும். கதிரவனை மறைக்க மேகங்கள் போராடும். ஆனால் போராட்டத்தில் .ெ வ ற் றி வெங்கதிரோனுக்குத்தான். கருவானம் செவ்வானமாகத் துலங்கும்.