பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&A. curr. 15ሃ இளங்கதிர் எழுந்தது; இருட் பகைமேல் சினப்பகை கொண்டது; இதைப் பார்த்துப் பறவைகள் கைகொட்டி ஆரவாரித்து எழுந்தன. இளங்கதிருக்கு எதிர்செய்ய ஆற்றாமல் காரிருள் போய் ஒளிந்து கொண்டது. உள்ளத்தில் உ வ ைக பொங்க இளங்கதிர் தன் பொன்னிறத்தை எங்கணும் இறைக்கத் தொடங்கிற்று, பாடல் வருமாறு : இளங்கதிர் எழுந்தான்! ஆங்கே இருளின்மேல் சினத்தை வைத்தான்: களித்தன. கடலின் புட்கள்: எழுந்தன கைகள் கொட்டி! ஒளித்தது காரி ருள்போய்! உள்ளத்தில் உவகை பூக்க இளங்கதிர், பொன்னி றத்தை எங்கணும் இறைக்க லானான். கடல் நீரும் நீலவtrனமும் கை கோக்கின்றன: இரண்டிற்கும் இடையிலே கிடக்கும் வெள்ளம் அழகு வீணையாகும். அவ்வீணைமேல் காற்று அடித்து அவ் வீணையின் நரம்பினை அசைக்கின்றது. அப்போது வீணை இயக்கவல்ல தேர்ந்த புலவனாக அக்காற்று தென்படுகின்றது, கடல் பாடும் பாட்டினைக் கேட்பா ULIFy&; 5 நண்பகலில் கதிரவன் வான வீட்டின் உச்சியில் ஏறி ஒளி செய்கின்றான்; செ ந் த ண ல் வீசுகின்றான். அத்தணலின் கொடுமையாற் புழுங்கிய மக்களுக்குக் குளிர் காற்று வழங்கி, வெப்பத்தைத் தணித்து உதவியது கடல். இவ்வையகம் முழுவதிற்குமே வாழ்க்கையில் செம்மை யினைக் கடல் வழங்கிற்று. நாளும் நற்செல்வம் வளர்கின்ற கடலாக அது துலங்குகின்றது.