பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5.com. 159 அண்டங்கள் கோடி கோடி அனைத்தையும் தன்ன கத்தே கொண்டஓர் பெரும்பு றத்தில் கூத்திடு கின்ற காற்றேl திண்குன்றைத் தூள்தூளாகச் செய்யினும் செய்வாய்; ஓேர் நுண்துளி அனிச்சப் பூவும் கோகாது நுழ்ைந்தும் செல்வாய்! காற்றின் ஆற்றலை இன்னும் மக்கள் உண்மையில் உணர்ந்தார்கள் இல்லை. ஆயினும் தென்னாடு பெற்ற தனிப்பெருஞ்செல்வம் தென்றலேயாகும். தென்றவின் இன்பம் வேறு எந்நாட்டிற்கும் தெரியவராது என்கிறார் கவிஞர். - தென்னாடு பெற்ற செல்வத் தென்றலே உன்இன் பத்தைத் தென்னாட்டுக் கல்லால் வேறே எங்காட்டில் தெரியச் செய்தாய்! சந்தன மரங்கள் நிறைந்த பொதிகை மலையாற் குளிர்ந்தும் அங்கு மலர்ந்துள்ள நறுமலர்களின் மணத்தினை நுகர்ந்தும், வண்டுகள் ரீங்காரம் செய்யும் பண்ணிசையில் கேள்விச் செல்வத்தை அடைந்தும், தென்றல் வளர்கின்றது தென்றலின் வரவினை வாழ்த்தாதவர்கள் உண்டா? தென்றலின் உருவம் புலப்படவில்லையாயினும் அத் தென்றலின் ஒவ்வொரு சின்ன நல்லசைவிலும் மனித குலம் சிலிர்க்கின்றது, பெற்ற அன்னையைக் கண்டோரி,