பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 60 பாரதியும் பாரதிதாச்னும் அவ்வன்னையின் அன்பினைக் கண்ணிற் காணார் அது போல் தென்றல் தன்னைப் புலப்படுத்திக் கொள்ளா மலேயே உயிர்க் கூட்டத்திற்கு ஊற்றின்பத்தைத் தருகின்றது. உலைத்திவை ஊதும் காற்றே உலைத்தீயில் உருகும் கொல்லனின் மலை நிகர்த்த தோளைத் தழுவியும் அவன் மார்பினில் தவழ்ந்தும் குளிர்ச்சியைத் தருகின்றது. "பெண்கள் விலக்காத உடையை நீபோய் விலக்கினும் விலக்கார் உன்னை' என்று தென்றலின் குறும்பினைத் தெளிவுறுத்துகிட்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். குழந்தையை இழந்தால் உயிர்வாழ முடியாது. அத்தகு சிறப்பு வாய்ந்தது சின்ன குழந்தை. அக் குழந்தையின் மலர் முகத்தின் மேலிருக்கும் நெற்றிமீது துலங்கும் குழலினை அசைக்கிறது. தென்றல். அன்பின் கொழுந்தென்று எண்ணி, எண்ணிற் குளிரூட்டி, அக் குழந்தையின் கையிலுள்ள கிலுகிலுப்கையினையும் தென்றல் அசைக்கின்றது. H மனமிக்க தென்றல் குளிர்ந்து கோடையின் வெப்பதி திற்கு மருந்தாகி, சோர்விற்கு மாற்றாகிப் பின் வானிற் பருந்தாகி இளங்கிளைமேற் பறந்தோடிப் பாட்டிசைக் கின்றது. - கவிஞர் தாளில் கவிதை எழுதிக் கொண்டிருந்தார். அவ்வழியே வந்தது தென்றல். வழக்கம்போல் இன்பம் தந்தது. கவிதை எழுதிய தாளைக் கிளப்பிற்று ஏன் என்று கேட்டார் கவிஞர். புழுதியைத் துடைத்தேன் எனப் புகன்றது. மீண்டும் கவிஞரைத் தழுவி இன்பம் தத்தது.