பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. I61 பாக்கு, தென்னை, சந்தனம் முதலிய மரங்கள் நிறைந்த பொதிகை மலைத்தென்றலே உன்னைப் பெற்றெடுத்தது; தமிழ்மொழியையும் பெற்றுத் தந்தது. அகத்தில் தமிழ் இன்பம் தரப் புறத்தில் நீ இன்பம் தருகிறாய். இவ்வாறு இருவரும் எனக்கு இன்பம் நல்குவதனை நான் கனவிலும் மறக்கமாட்டேன் என்கிறார் கவிஞர். கமுகொடு, நெடிய தென்னை கமழ்கின்ற சந்த ன்ங்கள் சமைகின்ற பொதிகை அன்னை, உனைத்தந்தாள்; தமிழைத் தக்தாள்: தமிழ்எனக் ககத்தும், தக்க தென்றல் நீ புறத்தும் இன்பம் அமைவுறச் செய்வ தைதான் கனவிலும் மறவேன் அன்றோ? தும்பியின் கண்ணாடிசி சிறகில் மின்னி, மலர்களின் இதழ்களில் கூத்தாடித் துளி தேன் சிந்தி, சிறுபிள்ளைகள் விளையாடும் பந்தினைத் தள்ளிச் சென்று, கிளியின் சிறகு களைப் பற்றித் தென்றல் விளையாடுவதாகக் கூறி முடிக்கிறார் கவிஞர். காடு நாட்டையடுத்து விளங்கியது காடு. காடு மிகுந்தால் மழைக்குப் பஞ்சமில்லை. காட்டில் இயற்கை கொலு வீற்றிருக்கிறது. நகரத்தைத் தாண்டிச் சிற்றுரைக் கடந்து சென்ற போது தோய்ந்த பாதையும் தொலைந்து காடு வந்தது; அங்கு மாடி வீடுகள் இல்லை; மரங்கள் பேசாமல் Д: ПР. - I I