பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IG2 பாரதியும் பாரதிதாசனும் நின்றுகொண்டிருந்தன. மேன்மேலும் நடந்து மேற்குத் திக்கை அடைந்து காடு நோக்கிச் சென்றார் கவிஞர். பருக்கைக் கற்கள் நிறைந்த வழியெல்லாம் பள்ளம் மேடு. முதலைகள் படுத்துக் கிடப்பை தப்போல் சின்னதும் பெரிதுமான வெடிப்புகளைத் தாண்டிச் சென்று "கன்மாடம்" என்னும் புறாக்கள் கற்களைப் பொறுக்கக் கண்டார் கவிஞர். கவிஞர் கவினுாறு காட்டுக் காட்சிகளைக் கண்டு: சென்றபொழுது மயிலொன்று அகவித் தோகை விரித்து வரவேற்பு வழங்கியது கருப்பு எலியொன்று வாலை ஆட்டி நின்றது. நல்ல வழி காட்டிச் சென்றது. கொடுவாள்மீசை கொண்ட வேடன் கவிஞர் எதிரில் வந்தான். வேட்டையிற் சிக்கிய பறவைகளைக் காட்டி னான். "அவைகளின் பெயர்களைக் கேட்டேன். அரத்துவாசன் என்னும் பறவையை நல்ல தூய தமிழில் . இயன் என்று கூறினான். சகோரத்தைச் செம்போத்து என்றான். தமிழா! நீ வாழ்க!" என்று வேடனைப் பாராட்டியதாகக் கவிஞர் கூறுகின்றார். முகத்திலே கொடுவாள் மீசை வேடன், என் எதிரில் வந்தான் அகப்பட்ட பறவை காட்ட அவற்றின் பேர் கேட்டேன்! வேடன் வகைப்பட்ட பரத்து வாசன் என்பதை வலியன் என்றான்: சகோரத்தைச் செம்போத் தென்றான்! தமிழா நீ வாழ்க என்றேன். விேடன் புன எலுமிச்சை மரத்தைக் காட்டி அம். மரத்தைக் குருத்தென்று கூறுவர் என்றான். அந்தம்