பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6R. Larr. ፲6ቖ பக்கம் சென்றால் மாமரம் ஒன்று எதிர்ப்படும். அவ்வழிச் சென்றால் காட்டை அடையலாம் என்றான்.வேடன். செருந்தி, ஆசிசா, இலந்தை, தேக்கீந்து, கொன்றை முதலிய மரங்கள் பெருங்காட்டின் கூரையாக வளர்ந்தி ருந்தன. அக்கூரை முகட்டின்மேல் நெடிதுயர்ந்து மூங்கில் தென்பட்டது. இரண்டு குரங்குகள் அங்கே பொன்னுரசல் ஆடிக் கொண்டிருந்தன. குருத்து அடையாளமும், கோணல் மாமரமும் கண்டு கவிஞர் காட்டை அடைந்தார். அக் காட்டில் யானை ஒன்று இளமரத்தை முறித்திடும். ஆந்தைக் கூட்டைப் பூனை ஒன்றணுகும்: அங்கே புலி ஒன்று தோன்றும். பாம்பின் பானை வாய் திறக்கக் கண்டு யாவுமே பறக்கும். மான்கன்று மானைக் காணாது நிற்கும். அக்கன்றை நரிபோய் மாளச் செய்யும். சேவல் வாலின் கொழுந்து பட்டெழுந்த கொசுக் கூட்டங்களை முகில் என்று கருதி மயில் தோகைவிரித் தாடும். அப்போது அடைத்தேன் வழிந்திடும். தேன் குடித்த கரடி மயிலுக்கு வாழ்த்துக் கூறும். காற்றால் ஆடிய கிளைகள்தோறும் தொங்கும் கொடிகள் அசையும். பறவைகள் பாடியாடி இருக்கும். பகை விாங்குகள் ஒன்றையொன்று தேடியபடி இருக்கும். சருகில் மோதிக் காற்று ஒசை எழுப்பி நிற்கும். இவ்வாறு காடு பயன் பல நல்கி நிற்கும். குன்றம் மலைக்காட்சி என்றும் மாறா மகிழ்ச்சி நல்கும். தமிழ்க்கடவுள் முருகன் மலைநிலக் கடவுளாவர்.