பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 பாரதியும் பாரதிதாசனும் குறிஞ்சிக் கிழவ" எனக் கோலக் குமரனை நக்கீரர் பெருமான் நன்முருகாற்றுப் படையில் பாராட்டுவர். குன்றம் சார்ந்தே முகில்கள் மழைபொழிகின்றன. அழகு உறையும் இடங்களில் ஒன்று குன்றம். தங்கத்தை உருக்கி விட்டாலெனத் துலங்கும் ஒடையில் செங்கதிர் மூழ்கும் நேரம் மாலைக் காலமாகும். மூழ்கும் இடம் குன்றமாகும். பச்சை மலையில் பவழம் போர்த்ததுபோல மாலைக்கதிர் குன்றத்தில் மறைகிறது. அருவிகள் வயிர மாலைகளாகவும், அடர்ந்த கொடி கள் பச்சைப் பட்டுத்துணிகளாகவும், குருவிகள் தங்கக் கட்டிகளாகவும், குளிர்ந்த மலர்கள் மாணிக்கக் கற்களின் குவியலாகவும் தோன்றுகின்றன. எருதின்மேற் பாயும் வேங்கைபோல், நிலவுமேல் எழுந்த மின்னல்போலச் சருகுகள் மேலெல்லாம் ஒளி சேர் தங்கத் தகடுகளாக கிளிக் கூட்டங்கள் தம் பசுமையான சிறகுகளை அடித்து, மலைப் புன்னை மரத்தின் பக்கம் வந்து கதிரைக் கிள்ளிப் போட்டு நிற்கின்றன. கதிரைத் தின்ற கிளிகளை' கவண் கல்லெறிந்து வீழ்த்தினேன் என்றாள் மலைப் புறத்து மங்கை. அவள் தோழியோ, வீழ்த்தினேன். கிளிகள் இல்லை; கிளிகள்போல் தோற்றம் தரும் கொழும் புன்னை இலைகள் என்றாள். - ஆதொண்டைப் பழத்தைப் பார்த்துக் கிளி என்று நினைத்தான் குறவன். மான் என்று கூறி குறுந்தாடி துக்கிய அவனை "நான் அம்மானே!" என்று கூறி நகைத்து நின்றாள் மலைக்குற மங்கை. - குன்றத்தின் சாரல், குன்றின் அருவிகள் குதிக்கும் குளமாகும். பன்றிகள் ஆங்கே மணற்கிழங்கு பறித்திடும்.