பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

śR. turr. 165 குன்றிமணி, வெண்மைக் கோம்புகள் கொண்டு குறத்தி யர்கள் அணிகள் பூண்டு நிலாமுகம் காட்டி நிற்பர். கதிர் முற்றி, அடித்தாள்கள் பழுத்த கொல்லைப் புலத்தில் பரண் அமைத்துக் குறமகளிர் கவண் வீசிக் கல்லெறியும்போது அவர்கள் கண்கள் நீலப்பூ நிகரீத் திருக்கும் அவர்கள் கைகள் செங்காந்தட்பூம் போன் றிருக்கும். இடுப்புகள் உடுக்கைகள் போன்ற காட்சி வழங்கும். மாலையில் கதிரவன் மறைகிறான் குன்றமாகிய பெண் ஒளியிழக்கிறாள். முற்றிய மூங்கிலால் இளங்கை நீட்டி வாராயோ என அழைப்பாள். சிறிய பறவைகள் அலறும். யானைகள் தம் இருப்பிடம் சேரும். குள்ள நரிகள் ஊளைச் சங்கு போன்ற குரலால் 'இருள் இருள். என்று கூவும். - கரிய திரைக்குள் இட்ட பொற்குவியல்போல, கருந்தமிழ்ச் சொல்லுக்குள்ளே கருத்துகள் இருத்தல்' போலக் குன்றத்தை இருள் மூடியது. இரண்டு நாழிகை நகர்ந்ததும் நிலவு கிளம்பிற்று. குன்றம் முத்துப்போலப் பொலிந்தது. எழில்பெற்ற குன்றத்தை வகையுற வருணிக்கிறார்: கவிஞர். நீல முக்காட்டுக்காரியாகிய நிலவாகிய பெண்ணாள், வற்றக் காய்ந்த பாலிலே உறைமோர் ஊற்றிப் பரு மத்தால் கடைந்து, பானை மேலுற்ற வெண்ணெயை அள்ளிக் குன்றின்மேல் வீசிவிட்டாள். அவ்: வெழிலை இயன்ற மட்டும் எடுத்துண்ணுவாய் என் தோழா! என்கிறார் கவிஞர். * - ஆனைகள், முதலைக் கூட்டங்கள், ஆயிரங் கருங் குரங்குகள், வானிலே காட்டிலே வந்த முகிற் கூட்டங்கள்,