பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி. பா. == s I67 புதுப்புனல் வெள்ளம் சலசலவென ஒலியெழுப்பிம் பாய்ந்து வந்தது; வானத்துக் கதிர்ச்சுடரின் தங்கவொளி யினைத் தான் வாங்கி மிளிர்ந்தது. புரட்சியாகப் புதுவ தாக வந்த புதுவெள்ளம் கோடைக்காலத்தின் கொடிய ஆட்சியினை மாற்றியமைத்தது. அப் புதுவெள்ளத்தின் வரவு பெருஞ் சிங்கத்தால் தாக்கப்பெற்ற யானையின் பிளிறல்போல் அமைந்தது. அவ்விரம்பு கடந்த வெள்ளத்தின் மீறலாலே மணற்கரை இடிந்து விழுந்தது. கரையோரத்தில் வளர்ந்திருந்த ஆலமரம் ஆற்றில் மல்லாந்து விழுந்தது. மேலே பருந்து பறந்தது. வாளை மீன்கள் நீரில் தம் பட்டாக் கத்தியனைய வாலைச் சுழற்றின. - - கரையோரத்தில் கன்றுகாலிகள் மேய்ந்து கொண் டிருக்கும். சிறுவர்கள் தரையினிற் காதை ஊன்றிக் கவனித்துப் புதுவெள்ளத்தின் திரைமோதும் ஒலி கேட்க தாகச் செங்கை காட்டிப் பெரியோரைக் கூவி அழைக் கின்றனர். அவர்கள் பேச்சொலியின் ஒலி நீளுகின்றது. வெள்ளம் இரு கரையிலும் மோதித் ததும்புகின்றது; அக்கரைகள் தங்கச் சரிவுகளாகின்றன. துறையோ முத்துத் தடுக்குகளாகின்றது. மீன்கொத்திப் பறவைகள் கழல்கின்றன. நீரில் மிதந்து செல்லும் மரங்களின்மேல் அமர்ந்திருக்கும் நாரை ஒன்று வெண்டாழம் பூப்போன்று விளங்குகின்றது. அதுபோது எழும் உவப்பினுக்கு எல்லை .யில்லை. சொல்லோவியம் துலங்கும் அப்பாட்டுச் சித்திரம் வருமாறு : இருகரை ததும்பும் வெள்ள நெளிவினில் எறியும் தங்கச் சரிவுகள்! துறையோ முத்துத் தடுக்குகள் சுழல்மீன் கொத்தி