பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 பாரதியும் பாரதிதாசனும் மரகத வீச்சு நீரில் மிதக்கின்ற மரங்க ளின்மேல் ஒருகாரை வெண்டா ழம்பூ உவப்புக்கோ உவமை இல்லை. இரவு முழுவதும் வெள்ளம் ஆற்றின் இரு கரைகளை யும் மோதியது. ஆற்றங்கரை மரங்கள் அசையாது நின்றன. வெள்ளம் எனும் படைக்கு மரங்களின் வாழ்த்து வந்து சேர்ந்தது. சிற்றுார்ப் பெருமக்கள் ஆற்றுவெள்ளத்தைக் காண: வந்தனர்; புதுவெள்ளத்தைப் போற்றி வாழ்த்துரைகள் புகன்றனர். காற்றெனப் பறந்து சென்று கழனிகளில் மடைதிறந்து வாய்க்கால்கள் மாற்றினர் வடிகால்களை மறித்து நின்றனர். நூற்றுக்கு நூறுபேர் நோய் தீர்ந்து வறுமை தீர்ந்தனர். க ல ப் ைப துரக்கிய உழவர் குடிப்பெருமக்கள் ஒய்வின்றி உழவுப் பண்பாடினர். தான் பெற்ற குழந்தை களின் மகிழ்ச்சி கண்டு ஆற்றுத்தாய் சிலம்படி குலுங்க நடக்கின்றாள். இந்த வையகம் தழைக்க என வாழ்த்து கின்றாள். செந்தாமரை கண்ணுக்குக் கவினுறு காட்சி வழங்குவது.செந்தாமரை யாகும். "பூவெனப் படுவது பொறிவாழ் பூவே" எனத் தாமரை மலரைத் தமிழ் இலக்கியங்கள் சிறப்பிக்கும். செந்தாமரை குறித்த செய்திகளைப் பாவேந்தர் பாரதி தாசனார் இவண் தொகுத்துரைக்கின்றார்.