பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

&.rusy. I69 கண்ணாடித் தரையின்மீது காணும் பச்சைத் தட்டில் கிடத்தப்பெற்ற ஒளிமுத்துக்கள் போல, குளத்துத் தண்ணிரிற் படர்ந்த தாமரை இலைம்ேல் முத்துத் துளிகள் போன்ற தண்ணிர்த் திவலைகள் கண்டு உவப்புடன் வீடு சேர்ந்தார் கவிஞர். சில நாட்கள் சென்ற பின்னர்க் குளக்கரை சென்றார் கவிஞர். பச்சை இலைத் தட்டில் சிந்தும் பால்போல் எழில் நீரும், பசிய பாம்புகளின் தலைகள்போல் நிமிர்ந் திருந்த தாமரை மொட்டுகளும் கண்டு காட்சி இன்பம் கொண்டார் கவிஞர். இருள் மிகுந்த வீட்டில் எழில்மிகு நங்கையர் தம் செங்கைகளில் மணிவிளக்கேந்தி அணி செய்தல்போல, தாமரை இலைப்பரப்பில் செந்தாமரைச் செவ்வரும்புகள் முகிழ்த்துக் கவிஞரின் இரு விழிகளுக்குப் பெருவிருந்து படைத்தன. பச்சைப் பட்டினைப் போர்த்துக்கொண்டு பெண்கள் சிரிக்கும் மாட்சி, பச்சிலைமேல் அரும்புகள் இதழ் விரிக்கும் காட்சியினைப் புலப்படுத்தும். விண்போன்ற வெள்ளக்காடு; வெள்ளப் பரப்பின் மேலே பச்சிலைக் காடு; அதன் மேலே செந்தாமரைக் காடு; இது நெஞ்சைக் கண்ணுக்குக் கொணர்ந்து கவிதை யைக் காணச் சொல்லும். விண்போன்ற வெள்ளக் காடு, மேலெலாம் ஒளிசெய் கின்ற வெண்முத்தங் கள்கொ ழிக்கும் பச்சிலைக் காடு மேலே