பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 பாரதியும் பாரதிதாசனும் மண்ணுளார் மகிழும் செந்தா மரைமலர்க் காடு நெஞ்சைக் கண்ணுளே வைக்கச் சொல்லிக் கவிதையைக் காணச் சொல்லும். செந்தாமரையின் சில பூக்கள் வாய்போல இருக்கும். வா' என்று அழைக்கும் கைபோலச் சில பூக்கள் இருக்கும். குளிர்பொய்கையிற் குள்ளக் குடைந்து நீராடி நீர்ப் பரப்பிற்கு மேலே தெரியும் பாவைமார் முகம் போலச் சில பூக்கள் பளிச்சென்று நெஞ்சைப் பறிக்கும். ஆயிரம் பெண்கள் நீரில் ஆர்ப்பாட்டம் செய்வதைப் போலச் செந்தாமரைப் பூக்கள் சிறந்தொளிரும். செந்தாமரையின் இதழ்கள் பின்வருமாறு ஒப்புக் கூறத்தக்கன. ஓரிதழ் குழந்தையின் கன்னத்திற்கு நிகர். ஒரிதழ் கண்ணை ஒத்திருக்கும். ஓரிதழ் மணவாளன் அழகினைக் கண்டு உவந்து பூரிக்கும் உதடு. மற்றுமோ? இதழ் பொல்லாதவர்களின் நெஞ்சம். கொடுத்துக் கொடுத்துச் சிவந்த உள்ளங்கை போல் ஓரிதழ் சிவந்திருக்கும். தாம் முயன்று பெற்ற தமிழுணர்வைத் தமிழ்த்தரணி முழுவதிற்கும் தந்த முற்காலப் புலவர் போலச் செந்தாமரைப் பூக்கள் சிறந்த தேன் கொடுக்கும். தமிழ்த் தேனிக்கள் போன்ற வண்டுகள் ரீங்காரமிட்டு அத்தேனைக் குடிக்கும். தேன் உண்ண வண்டு பாடும். தேன் உண்ட வண்டு கள் வேறோர் இடம் நாடிச் செல்லும். வானிடத்திற் பறந்து சென்று களியாட்டம் நடத்தும், சில தனிக்கூட்ட வண்டுகள். "மலர் என்னும் கட்டில் உண்டு; நான் உண்டு" என்று சில வண்டுகள் உறங்கும். நறும்பொடி இறைத்துச் செல்லும் சில வண்டுகள்.