பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.பா. I7 I நான் என்னை இழந்தேன்; இன்ப உலகத்தில் வாழத் தொடங்கினேன். பொன்துகள், தென்றல் காற்று, புதுமணம், வண்டின் ரீங்காரம், மாணிக்கம் நிகரித்த செந்தாமரைப் பூக்கள் இவற்றை இன்றெலாம் பார்தி திட்டாலும் தெவிட்டாது இன்பம்; இவையெல்லாம் அழகுக் கூத்துகள்; பாடல் வருமாறு : என்னை'நான் இழந்தேன்; இன்ப உலகத்தில் வாழ லுற்றேன்; பொன்துகள், தென்றல் காற்றுப் புதுமணம் வண்டின் பாட்டுப் பன்னூறு செழுமா னிக்கப் பறவைபோல் கூட்டப் பூக்கள் இன்றெலாம் பார்த்திட் டாலும் தெவிட்டாத எழிலின் கூத்தே! குாயிறு ஞாயிறு-கதிரவனைப் போற்றாத தமிழ் நூல்கள் இல்லை. "உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு பலர்புகழ் குாயிறு" என்பர் திருமுருகாற்றுப்படை தந்த நக்கீரர். எழுஞாயிற்றினை மக்கள் தொழு ஞாயிறாகக்கொண் டனர். "ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்" என்றார் சிலம்பு தந்த சீர்சால் கவிஞர் இளங்கோவடிகள். ஈண்டு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரும் ஞாயிற்றின் சிறப்பினையெல்லாம் தெளிவுறக் காட்டுகின்றார். ஞாயிறு ஒளிப்பொருள்! உலகிற்கு ஒரு பொருள். நெஞ்சத்திற்களிப்பை விளைவிக்கும். கூத்தைச் சேர்க்கும் அனற்பொருள். ஆழமான நீரினின்று வெளிப்படுவது போல் எழுகின்றது வானக் கூரையிலெல்லாம் பொன்னை