பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17.2 பாரதியும் பாரதிதாசனும் அள்ளித் தெளிக்கின்றது. கடற்பரப்பில் அலைமோதும் ஒளியூட்டுகின்றது. - ஞாயிற்றின் வரவால் உலகின் உயிர்க்கூட்டங்கள் உறக்கத்தினின்றும் எழுகின்றன. இருள் விலகியது: சோர்வு அகன்றது. எங்கும் ஒளி பரந்தது. எங்கும் உணர்ச்சி வெள்ளம் அலைமோதியது. ஞாயிற்றின் கதிர் கள் வானமுகட்டில் பொலிந்தேறி, மேற்றிசையில் மறையும்பொழுது கோடி கோடி, வண்ணத்தைக் காட்டிச் சுடர்விட்டன. - பொங்கியும் போலிந்தும் நீண்ட புதுப்பிடரி மயிரி சிலிர்க்கும் சிங்கம் நிகர்த்த ஞாயிறே! வானவீதியில் தகதகவென எரியும் நெருப்புப் பிழம்பே! மாணிக்க மலையே! தீர்ந்த தங்கத்தின் تاییG۶ سا வான அகலில் ஏற்றபட்ட பெருவிளக்கே! கடல்மீது கோடி கோடிக் கதிர்க் கைகள் ஊன்று கின்றாய்! நெடிய வானில் கோடி கோடி ஒளிக் கைகள் நீட்டி மலை, காடு, இல்லம். குளம், ஆறு இவை அனைத் திலும் ஒளியினைப் பாயிச்சி உயிரூட்டுகின்றாய். கருதியே நீ வாழ்க! o ஒரே புதுமை! தங்க இழையுடன் நூலைச் சேர்த்துப் பின்னிய ஆடை காற்றிற் பெயர்ந்தாடி அசைவிதைப் போல் நல்ல துrய நீரில் கதிர் கலந்து, குளிர் உடல் நெளிதல் காணலாம். இருளாகிய பலாப்பழத்தினை உன் கதிராகிய கத்தி உரித்து, களையாகிய ஒளியைக் கொணர்ந்தது. வைகறையில் இலை, தளிர், மலர்களில் இலங்கும் ானியாகிய முத்தை உன் இளங்கதிர்க் கையால் உண்பாய்! பின் அழகினை ஒளியையெல்லாம் அலை அலையாய்"