பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17Ꮺ; பாரதியும் பாரதிதாசனும் காட்சியை வழங்குகிறது. வைகறை வானம் வேறு; காலை வானம் வேறு; நண்பகல் வானம் வேறு மாலை வானம் வேறு முன்னிரவு வானம் வேறு; நள்ளிரவு விானம் வேறு. வகை வகையான காட்சி வழங்கும் வானம் என்றைக்குமே கண்கொள்ளாக் காட்சிதான். வெயில்ாைன் வேறு; மழை வான் வேறன்றோ! தொடக்கத்திலேயே விண்மீன்கள் நிறைந்த வானைக் காட்டும் கவிஞர் தம் பொதுவுடைமைக் கருத்தினைப் புகுத்திப் புதுநோக்கில் பாடியுள்ள திறம் காணலாம். "இம்மண்மீது உழைப்பவர்கள் எல்லாம் வறுமை வாய்ப்பட்டவர்கள். செல்வரிகள், வறியர்கள் உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையராகத் திகழ் கிறார்கள். பகற்பொழுது முழுவதும் கண்டு கொண் டிருக்கிற வானம் இரவுப் பொழுதில் நட்சத்திரங்களாகக் கொப்பளித்தெழுகிறதாம். கவிஞரின் கற்பனை இது:. மண்மீதில் உழைப்பா ரெல்லாம் வறியராம் உரிமை கேட்டால் புண்மீதில் அம்பு பாய்ச்சும் புலையர் செல்வராம், இதைத்தன் கண்மீதில் பகலி லெல்லாம் கண்டுகண் டக்திக் குப்பின் விண்மீனாய்க்கொப்ப வளித்த விரிவானம் பாராய் தம்பி! காற்புகை போன்று எழும் மேகங்களைக் கிழித்துக் கொண்டு வானின் மேலெழுகிறது நிலா; விண்மீன்கள் வானத்திற்குப் பொட்டு வைத்தாற் போன்று விளங்கும். வான் பூனை இருட்டையும் ஒட்டி நிற்கிறது.