பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(М. tuгү. 175 பகல் வானில் கதிரவன் ஒளி பரவிற்று: மேகக் கூட்டங்கள் வகை வகையான ஒவியங்களை வழங்கின; யானைக் கூட்டங்கள்போல் முகிற் கூட்டங்கள் பொலிந்தன. மாணிக்க அருவிகளின் நீர் தகதகவென மின்னின. நீலமலைச்சாரல் துலங்கின; புகைக்கூட்டம் எரிமலைகள்போல் இலங்கின; பொன்போற் பூத்தது வேங்கை, பூஞ்சோலை ஒளி கூட்டிற்று. கிழக்காகிய பெண் வானில் விட்டெறிந்த பந்தென விளங்கியது பருதி; அப் பந்து, மாலையில் மேற்றிசைப் பூங்காவில் விழுந்தது. அந்தியில் விளக்கேற்றி அழகு மங்கையர் இருள் நீக்கி ஒளி கூட்டுகின்றார்கள். காலையில் கோழி கூவிற்று! உலகம் கொண்டிருந்த இருளென்னும் மண்ணைக் காலை வானம் என்னும் கதிரோன் தங்க உலக்கை கொண்டு உழுதான். பின்னர் உலகின் உயிர் இயக்கம் தொடங்கியது. வாழிய வையம்’ என்று கூறிக் காலை வானம் மலர்ந்தது. காற்று வீசியது; நீளமான பூங்கிளை அசைந்தாடிற்று. மேகச் சேறு மூடிக்கொண்டது; அம்முகிற் சேற்றில் முகம் புதைத்துக்கொண்ட கதிரிற் பூத்த புதுப்புது வண்ண மெல்லாம் வானவில்லாய்த் தோன்றின. வானவில்லின் அழகினை வந்து பார்! பகல் வானத்தின் மேல் கருமேகக்கூட்டங்கள் படை யெடுத்தன. வில், வேல், வாள்போல் அவை மின்னின. நல்ல கார்கால மேகம் நகையொலியெழுப்பி நகைத்தது. வெற்றி பெற்ற இயற்கைப் பெண். பூ மழையை அள்ளி இறைத்தாள். தேன் உற்பத்தி செய்யும் மலரும் தீய்ந்துவிடும் அளவிற்கு வானம் எரிகிறது. செந்தியும்,நீறாகப்போகிறது.