பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176, பாரதியும் வாரதிதாசனும் காடு, வயல், ஊர், மலை, சோலை, ஆறு, கடல் முதலியன வெல்லாம் எரிவதோடு தானே ஏற்படுத்திய நெருப்பில் அக் கதிரவனும் எரிகின்றான். பகல் வானம் செய்த வெப்பத்தால் இந்த உலகத்தின் அடியெலாம் வெப்பத் தால் வேகும்; தேன்செய்யும் மலரும் தீயும்! செந்தீயும் நீறாய்ப் போகும்! . கான், செய், ஊர், மலை, கா. ஆறு கடலெலாம் எரிவ தோடு தான்செய்த தணலில் தானும் எரிகின்றான் பகலோன்! அங்கு வான்செய்த வெப்பத் தால்.இவ் வையத்தின் அடியும் வேகும், உச்சிக் கதிரவன் மேற்றிசை நோக்கி ஒரடி எடுத்து வைத்தான். நொச்சி மரத்தின் நிழல் கிழக்கில் சாய்ந்தது. நுரையும் நீரும் பச்சையும் பழுப்புமான பல வண்ண மேகங்கள் கூடிப் பொய்க்காட்சி போல வானைப் புகழும்: பின் மலையைக் காட்டும். வானம் எவ்வளவு பெரியது, அதனோடு ஒப்பிட்டு உன்னை நீ எண்ணிப்பார். இப்பூவுலகம் ஒரு கொய்யாப் பிஞ்சு என்றால் நீ அதில் சிற்றெறும்பு. மக்கள் அனைவரும் அவ்வாறே அமைந்திருக்க, நான் மேல், நீ கீழ் என்று மக்கள் பேசுவதெல்லாம் பித்தேறியவர் பேச்சேயன்றோ! எத்தனை பெரிய வானம்! எண்ணிப்பார் உனையும் நீயே, இத்தரை, கொய்யாப் பிஞ்சு: நீ அதில் சிற்றெ ரும்பே