பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(Л.rат, 177 அத்தனை பேரும் மெய்யாய் அப்படித் தானே மானே? பித்தேறி மேல்கீழ் என்று மக்கள்தாம் பேசல் என்னே! இவ்வாறு வான் தந்த பாடமாம் சமத்துவ நோக்கினை வடித்துத் தருகிறார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். ஆல் விண்ணுறவோங்கி மண்ணில் விழுது பரப்பித் தழைத்து வளர்ந்திருக்கும் ஆலமரம் காணக் கண்கோடி வேண்டும். மன்னன் படை தங்கும் பாங்குடைய மரம்; அம் மரத்தினை வருணிக்கும் கவிஞர் கூற்றில் நகைச்சுவை கொப்பளித்து வருவதனையும் காணலாம். ஆயிரம் கிளைகள் கொண்ட அடிமரம் பெரிய யானைக்குச் சமம். ஆலமரத்தின் இலைகள் வானிற் பரந்து சென்று கிளை பரப்பியுள்ளன. பவளம் போன்ற காய்கள். அக் காய்களை நிழல் தந்து காக்கும் இலைகள் எல்லாம் உள்ளங்கைகள் போன்றவை. ஊரே அடங்கும் நிழலைத் தரும் ஆலமரம் ஒப்பற்றதன்றோ! மரம்போல வளரும் கிளைகளுக்குத் துரண்களாக விழுதுகள் நிற்கும் . ஆலமரத்தைச் சுற்றி நிற்கும் மறவர் கள்போல இவ்விழுதுகள் நிற்கும். வேர்களோவெனில் வாலினைத் தரையில் வீழ்த்தி மண்டிக் கிடக்கும் பாம்பின் கூட்டம் போன்றதாகும். நீலவானத்தை மறைக்கும் ஆலமரமே ஒற்றைக்கால் கொண்டு துலங்கும் நீண்ட பந்தலாகும். மேலே உள்ள கிளைகளிற் விழுதுகளெல்லாம் மின்னிடும் பொன்னிழைகளாகும், அ ரு வி யி ன் kirr, cier.-18