பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 காரதியும் பாரதிதாசனும் தோற்றத்தைத் தரும் விழுதுகளும் உண்டு. வானக்கூரைக் கீழ் வேயப்பட்ட பச்சிலைப் பந்தல் ஆலமரம் என்றால், ஆலம் விழுதுகளைத் தங்கக் கதிர்கள் எனலாம். ஆலமரத்தின் அடிமரப் பதிவுகளிலெல்லாம் காட்டுப் பூனைகள் வாழும். இடையிடையே ஏற்பட்டுள்ள பொந்துகளில் பாம்புகளின் பெருமூச்சுகள் கேட்கும். பளிங்குக் கண் கொண்ட ஆந்தையின் சீறலும் அங்கே கேட்கும். பறவைக் கூட்டங்கள் தடதடவென ஒலி யெழுப்பிப் பறக்கும். தரையெல்லாம் சருகுகள் நிறைந்திருக்கும். = வெளவால்கள் உச்சிக் கிளைகளில் தொங்கிக் கொண் டிருக்கும், அவற்றின் வாய்க்குள் குலைப்பழத்தைக் கிளை கள் கொண்டு கொடுக்கும் கோதுகள் மழைப்போற் சிந்தும். தலைக்கொழுப்புப் பிடித்த குரங்கு சாட்டைக் கோல் ஒடிக்கும். பின்னால் இலைச்சந்தில் குரங்கின் வாலைப் பிடித்து அதனை எலியென்று கருதிப் பருந்து பற்றி இழுக்கும். i கொத்தான பழக்குலையைக் குறுகிய கிளையிற் கண்டு அதனைப் பற்றத் தாவிய பெண் கிளி, தவறிக் கீழே விழுந்து அங்கே துடித்து நிற்கும்; தன் பெண் கிளியைக் கூடி ஆண்கிளி அன்பால் இணைந்து நிற்கும். அருகில் கிட்டும் தித்திக்கும் பழங்கள் கூட அந்நேரத்தில் ஆண் கிளிக்குக் கசப்பாகத் தோற்றம் அளிக்கும், எழிலோவியம். காதலோவியம் படைக்கும் அக்காட்சி வருமாறு: கொத்தான பழக்கு லைக்குக் குறுங்கிளை தனில்ஆண் கிள்ளை தொத்துங்கால் தவறி, அங்கே துடிக்குந்தன் பெட்டை யண்டைப்