பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

o, curr- 179 பொத்தென்று வீழும்; அன்பிற் பிணைந்திடும்; அருகில் உள்ள தித்திக்கும் பழங்கள் அக்கால் ஆணுக்குக் கசப்பைச் செய்யும்! வானத்துக் குமிழ் பறந்து வையத்தில் வீழ்வதைப் போல் தாளம் பாடும் சிட்டுகள் தழைகிளைகள் மீது வீழ்ந்து பூனைக்கண்போல் ஒளிக்கும் புழுக்களைத் தின்று தின்று தேன் நிறைந்த முல்லைக் காம்புகளின் சிறிய அடிகளில் தத்தித் தத்திப் பாடும். ஆலங்கிளையிற் பாம்பு தொங்க, அதனைவிழுதென்று எண்ணிக் குரங்கு தொட்டுவிட்டு, விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கெனக் குதித்ததைப்போல், கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழேயுள்ள விழுதுகளையெல்லாம் ஒளியுடைய பாம்புகளென்று கருதி, உச்சிக் கிளைக்குச் சென்று, தன்வாலையே பாம்போவென அச்சத்துடன் கண்டு மருளும். நகைச்சுவை கொப்பளிக்கும் அக்காட்சி யினை வடித்து நிற்கும் பாடல் வருமாறு : கிளையினிற் பாம்பு தொங்க, விழுதென்று. குரங்கு தொட்டு விளக்கினைத் தொட்ட பிள்ளை வெடுக்கென குதித்த தைப்போல்' கிளைதோறும் குதித்துத் தாவிக் கீழுள்ள விழுதை யெல்லாம் ஒளிப்பாம்பாய் எண்ணி எண்ணி உச்சிபோய்த் தன்வால் பார்க்கும். அடுத்து, இயற்கையில் துலங்கும் ஒரு காட்சிவழி மாந்தர் கற்கவேண்டிய நன்றி எனும் பாடத்தினைக் கற்றுத் தருகின்றார் கவிஞர்.