பக்கம்:பாரதியும், பாரதிதாசனும்-சி.பாலசுப்ரமணியன்.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 பாரதியும் பாரதிதாசனும் ஆலமரத்தினைக் з т ді) дві மோதும்; நான் அசைவேனோ எனச் சிரித்துத் தன் அழகுக் கிளைகள் எல்லாம் குலுங்க அடிமரக்குன்று அசையாமல் நிற்கும். இதுகாறும் தாலாட்ட ஆளின்றித் தவிப்பெய்திய கிளைப் பறவைகளெல்லாம் தாங்கள் கால்கள் வைத்திருந்த கிளை கள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும். - ஆலினைக் காற்று மோதும்; அசைவெனோ எனச்சி ரித்துக் கோலத்துக் கிளைகு லுங்க அடிமரக் குன்று நிற்கும்! தாலாட்ட ஆளில் லாமல் தவித்திட்ட கிளைப்புள் எல்லாம் கால்வைத்த கிளைகள் ஆடக் காற்றுக்கு நன்றி கூறும்! மழை, மேகம், மின்னல் இவற்றிற்கு அஞ்சி மாங்குயில் பறந்துவந்து வழங்குக குடிசை” என்று வாய்விட்டு வண்ணம் பாடக் கொழுவிய கிளை தன் தோளை உயர்த்திக் குளிர்ந்த இலைகளின் கைகளால் பழந்தந்து களி தந்து பசுந்தளிர்களைக் குயிலுக்கு ஆலமரம் வழங்கி நிற்கும். புறாக்கள் - பல்வேறு வண்ணப் புறாக்கள் கண்ணுக்கு விருந்து; காட்சிக்கு மாட்சி; புறாக்கள் வாழ்வுகொண்டு மாந்தரிக்கு ஒழுங்கினையும் ஒழுக்கத்தினையும் கற்பிக்கிறார் கவிஞர். வேலன் என்னும் சிறுவன் வீட்டுக்கு வெளிப்புறத்தே இருந்த புறாவின் கூட்டைத் திறக்குமுன் குடுகுடு வெனப் புறாக்கள் குதிக்கும் ஒலி கேட்டது. கூடு திறக்கப்பட்டதும்